Monday, August 23, 2010

காற்றோடு கலந்த நட்புக்கு கண்ணீர் அஞ்சலி!



மிகவும் துயரமான செய்தியுடன் இன்றைய என் பொழுது விடிந்திருக்கிறது.

ஆர்குட்டிலும், முகநூலிலும் எனது நண்பர் ; பாஸிட்டிவ் அந்தோணி முத்து அவர்களின் மறைவுச் செய்தி கொஞ்ச நிமிடங்கள் அப்படியே கட்டிப் போட்டுவிட்டது!!

ஜப்பார் ஐயாவும் , என்.சுரேஷ் அவர்களும் அவரைப் பற்றி முத்தமிழ் மடலாடற் குழுமத்தில் எழுதியவற்றை படித்த போது தான் அவரைப் பற்றி முதல் முதலாக அறிந்தேன். படித்த அந்தக் கணமே அவர் மீது ஒரு அலாதி பிரியமும் , மதிப்பும் உருவாகிவிட்டது. பின் அவருடைய வலைப்பூக்களை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

http://mindpower1983.blogspot.com/

http://positiveanthonytamil.blogspot.com/

அதன் பின் அவரை ஆர்குட்டில் தேடிப் பிடித்து நானாக அறிமுகப்படுத்திக் கொண்டேன். நானாக நட்பு தேடிப் போன சிலரில் இவரும் ஒருவர்.

அவருடைய தன்னம்பிக்கையும் , வைராக்கியமும், மற்றவர்கள் மீதான பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பும் தான் அவர் மீது மதிப்பும், அன்பும் அதிகரிக்க காரணமாக இருந்தது. இயந்திரமயமான வாழ்கை வட்டத்தில் அவருக்கும் எமக்குமிடையேயான கடிதத் தொடர்புகளை விரல் விட்டு எண்ணலாம். ஆனால் அவருடைய எல்லா மடல்களிலும் ஒவ்வொரு வரிகளும் முழு அன்பையும் தோய்த்தெடுத்து வார்த்தெடுக்கப்பட்டவையாக, எமக்கான அவருடைய பிராத்தனையாக, வாழ்த்துகளாக இருக்கும்...! கடைசியாக புனித வெள்ளிக்கு பிராத்தனைச்செய்தி அனுப்பியிருந்தார். :(

கொஞ்ச நாளாகவே அவரிடமிருந்து மடல்கள் எதுவுமில்லை என்பதைக் கூட சில நாட்களுக்கு முன் தான் உறைத்தது; ஆனாலும் அவரை நலம் விசாரித்து ஒரிரு வார்த்தைகளில் எழுத வேண்டிய மடலை இன்றைக்கு நாளைக்கு என்று தள்ளிப் போட்டு வந்த என்னுடைய சோம்பல் இப்போது அவருக்கான கண்ணீர் அஞ்சலியாக இதை எழுது வைத்ததை நினைக்க ஆத்திரமாக இருக்கிறது.

சந்திக்க விரும்பி சந்திக்க முடியாமல் போகும் உறவுகளும் நட்புகளுக்குமான பட்டியல் நீண்டு கொண்டே போவதை பார்க்கும் போது வாழ்கையையிட்ட பீதி இன்னமும் அதிகமாகிறது.

எதிலும் பாஸிட்டிவ்வாகவே இருந்த ஒரு தன்னம்பிக்கை நிறைந்த ஆத்மா இன்று அமைதி கொண்டிருக்கிறது. வலியில்லாமல், கவலையில்லாமல் காற்றோடு காற்றாகிவிட்ட ஒரு நல்ல நட்புக்கு எமது கண்ணீர் அஞ்சலியை தவிர வேறு எதை அர்ப்பணிக்க முடியும்?? :(:(

அன்புடன்

சிநேகன் & சுவாதி


1 comment:

Sacred Heart Seminary said...

'தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்' - லூக்கா நற்செய்தி 23:46

இன்று (23.08.2010) காலை 10 மணியளவில் அந்தோணிமுத்து அவர்கள் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை (24.08.2010) காலை 11 மணிக்கு அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், பெரியநாயகி நகரில் நடைபெறும்.

"Father, into thy hands I commit my spirit!" - Luke 23:46

Mr. Antonimuthu passed away on August 23, 2010 at 10.00 a.m. due to stomach tumor and wheezing in Chennai.

Funeral Mass will be offered at 11.00 a.m. on August 23, 2010, 11.00 a.m. at Peria Nayagi Chapel in his native village, Peria Nayagi Nagar, Villupuram District 605702.