Thursday, February 14, 2008

காதல் என்ற ஒன்று

காதல் என்பது வெறும் உணர்ச்சியின் கலவையா உணர்வின் அழுத்தமா என்ற குழப்பம் எனக்கு எப்போதுமே இருபதாலேயே காதலை நான் வெறுக்கிறேன். காரணமில்லாமல் அழ வைக்கிறது; தேவையில்லாமல் தேடச் சொல்கிறது; அர்த்தமில்லாமல் கனவு காண செய்கிறது; இலக்கில்லாமல் எதிர்நோக்க வைக்கிறது; இயந்திரமாய் நடத்துகிறது; இயல்புகளை அகற்றி என்னுடைய எனக்கேயான தனித்துவத்தை இழக்க வைத்து , நான் நானாக இல்லாமல்.... இப்போது நான் யார் என்று என்னையே சுயம் மறக்கச் செய்கிறது..

காதல் ஒரு மடமை!
எத்தகைய அறிவாளியையும் அறிவு மளுங்கச் செய்யும் ஆற்றல் கொண்ட மடமை;எதையுமே சாதிக்கும் தகமையில்லாமலேயே எதையோ சாதித்து விடுவது போன்ற பிரமையூட்டும் மாயை!

காதல் என்றால் என்னவென்ற வரவிலக்கணத்தை தன்னகத்தில் கொண்டிராத பொய்யான ஊடகமோ இது?

காதல் என்பது ஒரு வகையில் மறுபிறப்பாகின்றது, புதிய அனுபவங்களாலும; புதிய அறிமுகத்தாலும், புதிய சிநேகத்தாலும் புதியதொரு உறவில் மறுபிறப்பளிக்கும் அதுவே சமயத்தில் ஒருவகையில் சிதையுமாகின்றது.

No comments: