Thursday, December 25, 2008

சுனாமி 4ம் வருட நினைவு நாள்.



சுனாமி பேரலை நிகழ்ந்த டிசம்பர் 26-ம் மனித குலத்தில் கறுப்பு நாளாகும். உலகின் பல்வேறு நாடுகளிலும் கோரத் தாண்டவமாடிய இயற்கை அன்னை இலட்சக் கணக்கான உயிர்களை பலி வாங்கிய கரி நாள் அது.

ஜாதி மத மொழி இன வெறியில் உலகம் முழுவதும் மனிதனை மனிதனே அழிக்கும் ஈனத்தை பொறுக்காமல் இயற்கையும் சீறி எழுந்ததோ என்னமோ..... உலகமே கண்ணீர் வடிக்கும் வகையில் இயற்கை அன்னை தனது கோரத்தாண்டவத்தை நடத்திக் காட்டினாள்.

புனரமைப்பு, புது வாழ்வளிப்பு , நிதி வசூலித்தல். மருந்துப் பொருட்களும், உணவுவைகளும், ஆடை அணிகலன் அன்பளித்தல் என்று மக்கள் பல்வேறு சமூக நிறுவனங்கள் மூலமாக உலகம் முழுவதிலுமிருந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் குவிந்தன.

எத்தனை அள்ளிக் கொட்டிக் கொடுத்தும் என்ன? அந்த கோரச் சீற்றத்தில் உறவுகளைப் பறிகொடுத்து தவித்து நடைபிணமாக தப்பிய ஆத்மாக்களுக்கு மனதளவில் ஆறுதல் சொல்லவோ , ஈடு கொடுக்கவோ முடியுமா? கண்ணுக்கு முன்னால் கடலலை அள்ளிச் சென்ற குழந்தைகளையும், மற்றச் சொந்தங்களையும் அந்த கணத்தில் அவர்கள் துடித்த துடிப்பையும் அவர்களால் ஆயுட் காலத்துக்கும் மறக்க முடியுமா? நல்ல வேளை நான் தப்பினேன் என்று நிம்மதியாக அவர்களால் இருக்க முடியுமா? முடியாது... முடியவே முடியாது!

இது போன்ற ஆழிப்பேரலைகள் வரலாற்றில் பல தடவை வந்திருக்கின்றன என்று படித்தோம்; அப்படியான ஆழிப்பேரலைகளில் எமது முன்னோர்களின் படைப்புகளும் , எமது தேசங்களின் பல பரப்புகளும், கட்டிடங்களும் கூட கடலுக்கடியில் அமிழ்ந்து போயிருக்கின்றன என்றும் படித்தோம். ஆனால் இப்போது நாம் வாழும் காலத்தில் வந்த இந்த கடற்கோளினால் தான் எமக்கு உண்மையான வலியையும் , வேதனையையும் உணர்வு பூர்வமாக
புரிந்து கொள்ள முடிந்தது.

எத்தனையோ இழந்துவிட்டோம் இந்த இயற்கையின் சீற்றத்தில். வாழ்கையின் நிரந்தரமற்ற வடிவையும் உணர்ந்தும்விட்டோம்....

ஆனால் எத்தனை ஆழிப்பேரலைகள் வந்தாலும் எமக்கிடையிலான வேற்றுமைகளும், வெறியும் அடங்கமாட்டாது போல் இருக்கிறதே?? :(:(

No comments: