Saturday, January 5, 2008

இப்படியுமொரு கடிதம் ! (கடிதம்2)

கடிதம் 2
அன்புள்ள மகன்:
நான் இன்னமும் உயிரோடு தான் இருக்கின்றேன் என்று தெரிவிப்பதற்காக சில வரிகள்... உனக்கு சரளமாக எதையும் வாசிக்கத் தெரியாது (எழுத்துக் கூட்டித் தான் வாசிப்பாய்) என்று எனக்குத் தெரியும் ஆதலால் நான் இக் கடிதத்தை மிகவும் மெதுவாகத் தான் எழுதுகின்றேன். இனி நீ வரும் போது உனக்கு எங்கள் வீட்டுக்கு வழி தெரியாது, ஏனெனில் நாங்கள் இப்போது வேறு வீட்டில் இருக்கின்றோம்.
உனது தந்தையை பற்றி........ அவருக்கு இப்போது அருமையான ஒரு வேலை கிடைத்துள்ளது. அவருடைய வேலையில் அவருக்குக் கீழ் 500 பேர் இருக்கிறார்கள். அவருடைய புதிய வேலை மயானத்தில் புல் வெட்டுவது.
இந்தப் புது வீட்டில் ஒரு துணி தோய்க்கும் இயந்திரம் இருக்கின்றது. ஆனல் அது சரியாக வேலை பார்ப்பதேயில்லை. போன வாரம் 14 மேல் சட்டைகளைப் போட்டு சங்கிலியையும் இழுத்து விட்டேன். அந்த வினாடியிலிருந்து 14 சட்டைகளையும் இன்னும் காணவில்லை.
இன்று காலை உனது சகோதரி மேரிக்கு குழந்தை பிறந்தது; ஆனால் இது வரை அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று எனக்குத் தெரியாது. அதனால் இப்போது நீ அத்தையா அல்லது மாமாவா என்று சரியாகச் சொல்லமுடியவில்லை.
கிறிஸ்துமஸுக்கு உன் அப்பாவுக்கு போதுமான அளவு குடிவகை இல்லை; ஒரு பைண்ட் பியரில் நான் ஒரு போத்தில் காஸ்டர் எண்ணெயை ஊற்றிவிட்டேன். அது அவரை புது வருடம் வரைக்கும் தாக்குப் பிடித்தது.
வியாழக் கிழமை நான் வைத்தியரிடம் அப்பாவுடன் போனேன். அங்கே வைத்தியர் என் வாயில் ஒரு சிறு கண்ணாடி குழாயை வாயில் போட்டு 10 நிமிடத்துக்கு வாயைத் திறக்க வேண்டாம் என்று சொன்னார். அதனால் உன் அப்பா வைத்தியருக்கு இன்னுமொரு குழாய் வாங்க பணம் கொடுத்தார்.
இந்த வாரம் 2 தடவை தான் மழை பெய்தது. முதல் தரம் 3 நாளும் இரண்டாவது தடவை 4 நாளும் பெய்தது. எமது கோழிகள் ஒரே முட்டையை 4 தடவை இட்டன, காரணம் திங்கள் கிழமை ஒரே காற்றாக இருந்ததாலோ என்னமோ.
உன் பாட்டியின் மயான நிலத்துக்கான தவணைப் பணத்தை இன்னும் 7 நாட்களுக்குள் கட்டாவிட்டால் பாட்டியை வெளியே வந்துவிடுவாள் என்று நேற்று கடிதம் வந்தது.
வேறு விடயம் எதுவும் இல்லை
இங்ஙனம்
உன் அன்பான அம்மா.
பிற் குறிப்பு:
நான் உனக்கு $ 10.00 இத் துடன் அனுப்ப இருந்தேன். ஆனால் அதற்குள் கடிதத்தை ஒட்டிவிட்டேன்.

(ஒரு போலிஷ் நாட்டுத் தாயின் கடிதம். மொழி பெயர்த்த்வர் என் கணவர் தேவகுமார் அவர்கள்.)

No comments: