Saturday, January 5, 2008

இப்படியுமொரு கடிதம்! (கடிதம்3 )

அன்புள்ள நண்பா!

இங்கே குறிப்பிடும் அளவுக்கு பெரிதாக எதுவுமில்லை. எனக்கு தெரியும் நீ
அங்கு கொரியாவில் மிகவும் அசௌகரியமான சூழலில் இருப்பாய் என்றும்
சந்தோஷமான நிகழ்வுகள் உனக்கு மிகவும் அரிதாகவே கிடைக்கும் என்பதுவும்.

நேற்றிரவு நான் உன் மனைவியை பார்க்கப் போயிருந்த போது உனது கடிதங்கள்
யாவற்றையும் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவை யாவும் கொஞ்சம்
அதிகப்படியான உனர்சிபூர்வமானதாயிருந்தாலும் உன்னையும் குற்றம் சொல்ல
முடியாது தான். உன் நிலை அப்படி. உன் மனைவி காத்தரீன் அதிகப்படியான
பிறவி; பிரமிக்க வைக்கும் அழகி; கவர்சியானவள்; இப்போதும் வீதியில் அவளைப்
பார்க்கும் போது வாலிபர்கள் விசில் அடிக்கத் தான் செய்கின்றனர்.
நான் போயிருந்த போது உனது மத்துனன் கிறிஸ்டோபர் வந்திருந்தான். நீ கொரியா
போவதற்க்கு முன் வாகிய அந்த பிரவுன் நிற சூட் டை அவன் அணிந்திருந்தான்.
நீ திரும்ப வரும் போது அந்த சூட் அவுட் ஆப் பாஷனாகிவிடும் என்று
காத்தரீன் அதை அவனுக்கு கொடுத்துவிட்டாள். வேறு சிலரும் நேற்று நான்
அங்கு போயிருந்த போது அங்கு வந்திருந்தனர். நாங்கள் எல்லோருமாக 2 பெட்டி
பீர் குடித்து முடித்தோம்.அதற்கான செலவை நாம் எல்லோரும் பங்கிடுவதாகச்
சொன்னோம்.ஆனால் காத்தரீன் அதற்கு சம்மதிக்கவில்லை; தனது கைச்செலவுக்கு நீ
மேலும் $10.00 அதிகமாக அனுப்புவதாய் கூறினாள்;அத்ஹ்டுடன்ன் உனது கோல்ஃப்
கிளப்ஸ் ஐ $25.00 க்கு பீட்டர் வாங்கினான்.பரவாயில்லை.. உன்னுடைய
காமிராவையும் , புரோஜெக்டரையும் காத்தரீன் விற்ற விலையை விட இது
அதிகப்படியாக விலை போயிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
காத்தரீன் வாழ்கையை மிகவும் சந்தோஷமாக அனுபவிக்க தெரிந்திருக்கிறாள்.
உன்னுடைய செவி காரை விப்பத்துக்குள்ளாக்கிய பின் அவள் மிகவும் பயந்து
போயிருப்பாள் என்று நினைத்து அவலை தேற்ற வேண்டுமென்று நினைத்திருந்தேன்.
ஆனால் அவள் நான் நினைத்தற்கு மாறாக மிகவும் தையமான பெண். நீ கூட
நினைத்திருக்க மாட்டாய் உன் கார் இவ்வலவு சேதமடைந்த பின்னும் அவள் ஒருவித
ஆபத்துமில்லாமல் தப்பியிருப்பாள் என்று. அவளுடன் விபத்துக்குள்ளான மற்ற
ஓட்டுனர்கள் எல்லாரும் இன்னமும் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில்
தான் இருக்கின்றனர். அவர்கள் நஷ்ட ஈடு வழக்குத் தொடரும் எண்ணத்துடன்
இருக்கிறார்கள். மிகவும் பரிதாபத்துக்குரிய விஷயம் என்னவென்றால்
காத்தரீன் காருக்கான இன்சூரன்ஸ் பணத்தைக் கட்ட மறந்துவிட்டாள் என்பது.
அப்படியிருந்தும் ஜோக் என்னவென்றால் காத்தரீன் அதைப் பற்றி கொஞ்சம் கூட
கவலைப்படவில்லையென்பதே. எங்கள் எல்லோருக்கும் அவளுடைய துணிவும், சவால்களை
அவள் சமாளிக்கும் புத்திசாலித்தனமும் மிகவும் பிரமிப்பாகவும்
போற்றத்தக்கதாகவும் இருக்கிறது, மிக விஷேஷமாக இத்தனை பணப்
பிரச்சனைகளுக்கும் உன் வீட்டை பாங்கில் ஈடு வைத்து தீர்க்கப் போகிறள்
என்பதில். நீ புறப்படும் முன் அவள் பெயரில் பவர் அஃப் பட்டாணியை எழுதி
வைத்தது மிகவும் நல்லதாகப் போய்விட்டது.

ம்ம்.. திரும்பவும் நேற்று காத்தரீன் கொடுத்த விருந்துக்கு
வருகின்றேன்...நீ இங்கு இருந்து பார்த்திருக்க வேண்டுமே ..உன் மனைவி
காத்தரீன் ஜிப்ஸி ரோஸ் லீ யைப் போல் நடித்துக் காட்டியதை. அபாரம்!
அற்புதம்!! நாங்கள் விடைபெறும் போது கூட அவளுடைய நடிப்பு மிகவும்
உச்சக்கட்டத்தில் இருந்தது. கிளவ்டி மட்டும் தான் அங்கு
மிஞ்சியிருந்தான். உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன் இப்போது கிளவ்டி
உன் வீட்டில் ஒரு அறையில் தங்கியிருக்கிறான் என்பது. அது அவனுடைய
அலுவலகத்துக்கு கிட்ட என்பதோடு அவனது பெற்றோல் செலவும் மதிய உணவுச்
செலவும் மிச்சம் அல்லவா?

வேறு விஷேஷங்கள் எதுவுமில்லை.. எனது மனைவிக்கு அலுவலகத்தில் மற்றுமொரு
ஊதிய உயர்வால் இப்போது கிழமைக்கு $110.00 கிடைப்பது என்பதைத் தவிர.
எனக்கு கிடைகும் $95.00 யுடனும் அவளுடைய ஊதியத்துடனும் இப்போது
எங்களுக்கு வாழ்கை பரவாயில்லாமல் போகிறது.

இப்போது இரவு.மிகவும் நேரமாகிவிட்டது, தூங்க வேண்டும். அதனால் கடிதத்தை
இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். எனது அறை ஜன்னலால்
பார்கிறேன், உன் மனைவியும் கிளவுடியும் டாக்ஸியில் எங்கோ போகிறார்கள். நீ
இங்கிருக்கும் போது அடிக்கடி அணியும் தோல் ஜாக்கட்டை தான் கிளவ்டியும்
அணிந்திருக்கிறான் இப்போது..

நல்லது நண்பா..விடை பெறுகிறேன்.. ம்ம் உன்னுடன் நானும் கொரியா
வந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்குமென்று எண்ணுகின்றேன்.
கொரியன்களை ஒரு வழி பண்ணியிருக்கலாம் இருவருமாக சேர்ந்து. எனக்கு
கொடுத்து வைக்கவில்லை. :-(

இங்ஙனம்
உனது நண்பன்
எடி.


பிற்குறிப்பு:

காத்தரீன் கர்ப்பமாக இருக்கிறாள் என்ற வதந்தியை கவனத்தில் எடுத்துக் கொள்ளாதே!

(போர் முனையில் இருக்கும் ஒருவனுக்கு அவனுடைய நண்பன் அனுப்பிய கடித்தின்
மொழி பெயர்ப்பு இது. )

மொழி பெயர்த்தவர் : என் கணவர் தேவகுமார் (எ) சிநேகன்.

No comments: