Monday, October 20, 2008

இயக்குனர் ஸ்ரீதர்.

தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர். பீம்சிங் போன்ற இயக்குனர்கள் சிவாஜி, எம்ஜிஆர் என்று கலையுலகின் ஜாம்பவான் நடிகர்களை வைத்து படமெடுத்த காலங்களில் அவர்களுடைய படங்களோடு போட்டி போடுமளவுக்கு தன்படங்களை புதுமுக நடிக நடிகர்களைக் கொண்டே உருவாக்கிய திறமையான , சவாலான இயக்குனர்.
ரவிசந்திரன், ஜெயலலிதா, காஞ்சனா, வெண்ணிற ஆடை நிர்மலா, ஸ்ரீகாந், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற நடிக நடிகைகளை கலையுலகில் மின்னச் செய்தவர்.
இவரின் காதலிக்க நேரமில்லை, நெஞ்சிருக்கும் வரை,தேனிலவு, கல்யாணப்பரிசு , ஆலயம், போன்ற படங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. இன்றைய பிரபல நட்சத்திரமான விக்ரம் அவர்களையும் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இவரே.
இவருடைய படங்களில் பாடல்களும் , நடன அமைப்புகளும் சிறப்பானவையாக இருப்பது குறிப்பிடத் தக்கது,
நல்லதொரு இயக்குனர் கடைசிக் காலத்தில் கைகள் செயலிழந்து இருந்தார் என்று பத்திரிகைகளில் படித்தேன். அப்போது கூட ஒரு பத்திரிகைக்கு தன்நம்பிக்கையோடு பேட்டி கொடுத்திருந்தார்..."மீண்டும் வருவேன் " என்று.... ஆனால் வராமலே போய்விட்டார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் அவரது இழப்பை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கு வழங்கவும் எல்லாம் வல்ல இறைசக்தியை வேண்டுகின்றேன்.

No comments: