Thursday, January 15, 2009







இந்த வருடம் வரலாற்றில் முதன் முதலாக தமிழ் வருடப் பிறப்பை உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் கோலாகலமாய்க் கொண்டாடப் போகும் வேளையில் ஈழத் தமிழர் மட்டும் கண்ணீருடன் புது வருடத்தில் காலடி எடுத்து வைக்கப் போகிறார்கள் என்பது தான் வேதனை.

மங்களம் பொங்கும் நன்னாட்க‌ளில் மனம் நிறைவான வாழ்த்துகள் சொல்லி நிறைய நாட்களாகிவிட்டது. என்றாலும் ஒப்புக்காக ஒவ்வொருவரும் சொல்லும் வாழ்த்துக்கு உங்களுக்கும் அவ்வாறே ஆகட்டும் என்று இயந்திரத் தனமாக சொல்வது வழக்கமாகிவிட்டது. இந்த வருடம் எத்தகைய ஒரு சிறப்பான புத்தாண்டாக இருந்தும் என் தாயக சகோதர சகோதரிகள் கண்ணீருடன் புதுவருடத்தை எதிர் நோக்கியிருக்கிறார்கள். இந்த தமிழ் புத்தாண்டின் விடியலில் எமது மண்ணில் எத்தனை குண்டுகள் விழப் போகின்றனவோ? இன்று எத்தனை குழந்தைகள் அனாதைகளாகப் போகிறார்களோ? எத்தனை பேர் மரண ஒப்பாரிகளோடு உழலப் போகிறார்களோ?

என்றாலும் எங்களுக்கான விடியல் புதிதாக என்றோ ஒரு நாள் விடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இந்த பொங்கலையும் தமிழ் புத்தாண்டையும் முகமன் கூறுகிறேன்.

No comments: