Thursday, January 15, 2009

கடலில் விழுந்த பயணிகள் விமானம்.

கடலில் விழுந்த பயணிகள் விமானம்

.



நியூயோர்க் நகரத்தில் லகுவார்டியா விமான நிலையத்திலிருந்து சார்லட் என்னும் இடத்திற்கு நியூயோர்க் நேரப்படி மதியம் 3;26 க்கு 155 பயணிகளுடன் புறப்பட்ட யு.எஸ் ஏர்வேஸ் விமனம் 1549 உடன் பறவை ஒன்று மோதியதில் விமானத் தின் இரண்டு இயந்திரங்களும் பழுதடைந்த நிலையில் மான்ஹட்டன் நகரிலிருக்கும் ஹட்ஸன் ஆற்றுக்குள் விமானத்தை இறக்க வேண்டிய நிலமைக்கு விமானி தள்ளப்பட்டார்.

உடனடி மீட்பு பணிகள் துரித கதியில் நடக்கின்றன. விமானத்திலிருந்த அத்தனை பயணிகளும் வெளியே பத்திரமாக காப்பாற்றப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெளியேற்றப்பட்ட பயணிகளில் ஒருவரான ஜெஃப் என்பவர் " விமானம் வானில் பறக்கத் தொ டங்கி 3 நிமிடத்தில் தீப்பிளம்பு வந்ததைப் பார்த்தோம். ஆனால் விமானியின் சாதுர்யத்தினால் விமானம் பத்திரமாக இறங்கிவிட்டது." என்று சொன்னார்..

விமானம் க டலில் வீழ்ந்த சில நிமிடங்களிலேயே விமானத்தைச் சுற்றி மீட்பு ப் படகுகள் துரித கதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டதும், விமானத்தை ஆபத்திலிருக்கும் போதும் பதட்டப்படாமல் பத்திரமாக விமானத்தை இறக்கிய விமானியின் திறமையும் விமானத்திலிருந்த அத்தனை உயிர்களையும் பத்திரமாக வெளியேற்ற முடிந்தது எனலாம்.

எப்படியோ பயணிகள் அத்தனை பேரும் 2:30 மணி நேர இடைவெளியில் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டதில் மகிழ்ச்சியே.


நேரடி ஒளிபரப்பை http://www.msnbc.msn.com/id/21134540/vp=22887506&#28679027 இல் பார்க்கலாம்.

No comments: