Friday, January 16, 2009

நீங்காத நினைவுகள்!!

இந்திய அரசுகள் தமிழீழ மக்களுக்கும், தமிழீழப் போராட்டத்திற்கும் இழைத்த துரோகங்கள் கணக்கிலடங்காதவை. அவர்களுடைய துரோகப்பட்டியலில் முதன்மையானது குமரப்பாவும் அவருடனான மற்றைய போராளிகளினதும் தற்கொலைகள் அடுத்தது கிட்டண்ணாவும் அவருடனாம மற்றைய போராளிகளினது மரணங்கள். இந்தத் துரோகங்களை மறந்தாலும், மன்னித்தாலும் நாம் ஈழத்தமிழர்களே அல்ல!!



glitter-graphics.com

4 comments:

Arun Kumar said...

there is no need for you peoples to pardon india. ofcourse the people from the war tainted island always creating problems for our life.

coming to our country india as refugess getting good education and flying to western countries.

if we (indians ) start writing the past and present ditching activities by puli's and refugees you peoples cant tolerate.

சுவாதி சுவாமி. said...
This comment has been removed by the author.
சுவாதி சுவாமி. said...

திரு வேலூர் வரதராஜ் அவர்களே!கிட்டுவின் மரணத்தின் அடிப்படை தெரியாமல் அல்லது இந்தியாவை காங்கிரஸ் ஆண்ட காலங்களில் அந்த அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் ஈழத்தமிழர்களின் முதுகில் குற்றிய விபரம் தெரியாமல் பிளாக்மெயில் செய்யும் ரீதியில் பின்னூட்டங்கள் இடுவதை என் வலைப்பூவில் தவிருங்கள். உலகம் முழுவதும் தெரிந்த ஒரு விதயத்தை நீங்கள் அறியாமல் இருப்பது என் தவறல்ல; உங்கள் பயமுறுத்தல்களால் நான் என்னுடைய கருத்தை எழுதாமல் இருக்கப் போவதுமில்லை. ; பூனை கண்ணை மூடிக் கொண்டிருப்பதால் உலகம் இருண்டுவிடாது.

உங்களுக்காக மேலும் கிட்டுவின் மரணத்தினைப் பற்றிய தகவல் கீழே தருகிறேன்..:

"கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார். களத்தில், எரிமலை' எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு,விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகா வண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது. அவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார்.

கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள். யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது, தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள்."

ஈழத்தமிழர் என்றைக்குமே கங்கிரஸ் அரசியல்வாதிகளின் காழ்ப்புணர்ச்சிகளுக்கு அஞ்சப் போவதில்லை; அதனுடைய குள்ள நரித்தனத்திற்கு அடிபணியப் போவதுமில்லை ..அந்த தமிழர்களில் ஒருத்தி தான் நானும். ஆகையால் என் வலைபூவில் என்னை மிரட்டும் எந்த நிலைப்பாட்டையும் கையாண்டு என்னை பணிய வைக்கலாம் என்ற கனவு உங்களுக்கு வேண்டாம்.

இது என்னுடைய வலைப்பூ. இங்கு எனது கருத்துகளை எழுதும் முழு சுதந்திரம் எனக்கு இருக்கிறது. உங்களால் அதை ஜீரணிக்க முடியாவிட்டால் இந்தப்பக்கம் உங்கள் வருகையை தவிருங்கள்.எனக்கு அதில் மகிழ்ச்சியே... :):)

அன்புடன்
சுவாதி

சுவாதி சுவாமி. said...

வேலூர் வரதராஜ் said...

there is no need for you peoples to pardon india. ofcourse the people from the war tainted island always creating problems for our life.

உங்கள் இராணுவமும் அரசுகளும் எங்கள் மண்னில் எமக்கு தந்த இன்னல்களோடு ஒப்பிடும் போது நீங்கள் சொல்பவை ஒன்றுமேயில்லை. எமது போராட்டத்தில் உங்கள் நாடு மூக்கை நுளைத்திருக்க வேண்டிய தேவையே இல்லை. இந்திராகாந்தி ஆரம்பித்த சதி..அவர் கட்சியால் இன்றளவும் எமது மண்ணில் நித்திய சாவுகளுக்கு உரமிட்டு வருபவை.
coming to our country india as refugess getting good education and flying to western countries.

உங்கள் நாட்டில் எந்தக் கல்லூரியிலும் ஈழத்தமிழருக்கு இலவச படிப்பு ஈயவில்லை. சொல்லிக் கொடுக்கப்படும் கல்விக்கு கட்டணம் வசூலிக்காமல் எந்தக் கல்லூரியும் உங்கள் ஊரில் நடப்பதில்லை என்பது எமக்கும் தெரியும். உங்கள் பிரசைகளே மேல்படிப்பு படித்துவிட்டு மேற்குலகில் சம்பாதிக்க ஓடும் போது அகதியாக வந்த நாம் ஆயுள் முழுவதும் உங்கள் அடிமைகளாக கிடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? நல்ல வேடிக்கை தான்!
if we (indians ) start writing the past and present ditching activities by puli's and refugees you peoples cant tolerate...

முடிந்தால் தொடங்குங்கள்..வாழ்த்துகள் பல..! இன விடுதலைக்காக உயிரை துச்சமாக மதித்து களம் பல கண்டவர்கள் நாம்..காசுக்காக ஓட்டு விற்கும் கூட்டத்தின் மிரட்டல்களில் ஒடுங்கி விட மாட்டோம். :):)

அன்புடன்
சுவாதி