Monday, January 19, 2009

ஒரு கனவை நனவாக்கிய ஒபாமா!

இன்று அமெரிக்காவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினம். அமெரிக்க நாட்டின் நாற்பத்தி நாலாவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும் , அந் நாட்டின் அரசியல் வரலாற்றில் முதலாவது ஆபிரிக்க - அமெரிக்க கறுப்பினத்தைச் சேர்ந்த ஜனாதிபதி என்ற பெருமைக்குரியவருமான பராக் ஒபமா ஜனாதிபதியாக பதவியேற்கும் மிக முக்கிய சரித்திர பிரசித்தி பெற்ற தினமல்லவா? 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோன் மெக்கெய்னை பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிவாகை சூடியதன் மூலம் அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தக் கணத்திலிருந்தே அமெரிக்காவின் மூலை முடுக்கெல்லாம் ஒபமா அலை வீசத் தொட்ங்கிவிட்டது. இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன் இந்த தேசத்தில் நடந்த நிறவெறியின் கோரங்களில் அமெரிக்காவின் வரலாறு பூசிய கறைகள் சொல்லில் அடங்காதவை. மார்ட்டின் லூதர் கிங் என்ற சாத்வீக போராளி அன்று தொடக்கிய கறுப்பின மக்களுக்கான சம உரிமை கோரிக்கைப் போராட்டத்தில் தன்னுயிரை பறி கொடுத்தாலும் தன் கனவை மட்டும் அமெரிக்க மக்களின் இதயங்களில் விதைத்து விட்டுத் தான் மறைந்தார். இன்றைய விடியல் அவருடைய கனவை நனவாக்கியிருக்கிறது.


No comments: